50 இலட்சம் மூட்டை காணாமல் போனமை தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு...

மத்திய வங்கியின் களஞ்சியசாலையில் இருந்து ஐந்து மில்லியன் ரூபா நாணயத் தாள்கள் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பு பின்வருமாறு.
11.04.2023 அன்று நாணயச் செயல்பாட்டின் போது,இலங் கை மத்திய வங்கியின் பெட்டகத்தினுள் 5 மில்லியன் ரூபா பெறுமதியான (5000 ரூபாய் நோட்டுகள்) ஒரு கட்டு காணாமல் போயுள்ளது.
இது தொடர்பில் உடனடியாக உள்ளக விசாரணை ஆரம்பிக்கப்பட்டு கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பில், இலங்கை மத்திய வங்கி விசாரணைகளை கடுமையாக மேற்கொள்ளவும், உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் செயற்பாடுகளை வலுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு தேவையான உதவிகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.



