பெண் சீருடையில் பள்ளிகளில் சுற்றித் திரிந்த 40 வயது ஆண் கைது
#Tamilnews
#Breakingnews
#ImportantNews
#world_news
Mani
2 years ago

பெரு
மாணவிகளின் சீருடையை அணிந்து பள்ளிகளில் சுற்றித் திரிந்த 40 வயது நபர் சிக்கினார்.
அந்நாட்டின் ஹூவான்காயோ பகுதியிலுள்ள பள்ளி ஒன்றில் கழிவறைக்குள் சென்ற மாணவிகளில் ஒருவர், உள்ளே மாணவிகள் போன்றே சீருடை, இரட்டை ஜடை மற்றும் மாஸ்க் அணிந்த நபர், கழிவறையில் இருந்ததைக் கண்டு அச்சமடைந்து கூச்சலிட்டுள்ளார்.
தொடர்ந்து பள்ளி நிர்வாகத்தினர் அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார் அந்த நபரை கைது செய்தனர். தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர், அந்த நபரை சூழ்ந்து கொண்டு தாக்க முற்பட்டனர்.
பிடிபட்ட நபரின் செல்போனை ஆய்வு செய்தபோது, வேறு சில பள்ளிகளிலும் சீருடை அணிந்து இதே பாணியில் சுற்றித் திரிந்த புகைப்படங்கள் இருந்துள்ளன.



