இரண்டு வாரங்களில், முட்டைகளின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் - நளின் பெர்னாண்டோ
#Egg
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#srilankan politics
#Tamil People
#Tamil
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
எதிர்வரும் இரண்டு வாரங்களில், முட்டைகளின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதன்படி, கட்டுப்பாட்டு விலையை மீறி முட்டையை விற்பனை செய்வோருக்கு இடமளிக்க போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு முட்டைகள் விற்பனை செய்யப்படுமாயின் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு 30 ரூபாவுக்கும் குறைவாக உள்ளதாக முட்டை விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த அப்புஹாமி குறிப்பிட்டுள்ளார்.