உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் குற்றவாளி இல்லை - மைத்திரிபால சிறிசேன
#Maithripala Sirisena
#Attack
#Easter Sunday Attack
#BombBlast
#Lanka4
Kanimoli
2 years ago

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தான் குற்றவாளி இல்லை என முன்னாள் ஜனாதிபதி பாராளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மற்றவர்கள் செய்த தவறுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து ஒரு நாள் காலையிலும் மாலையிலும் சிலர் அறிக்கை விடுவதாகவும் வாய்கள் இருப்பதால் யார் வேண்டுமானாலும் பேசலாம் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.



