இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவில் விற்பனை - அம்பலமாகிய உண்மை !!
#SriLanka
#sri lanka tamil news
#srilanka freedom party
#baby
#Lanka4
#srilankan politics
Prabha Praneetha
2 years ago
11000க்கும் மேற்பட்ட தாய்நாட்டு குழந்தைகள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை நடத்தி வந்த மலேசிய தம்பதியரை அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் கைது செய்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளது.
60 முதல் 80 டொலர்களுக்கு இந்தக் குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன. மலேசிய கடவுச்சீட்டைக் கொண்ட இலங்கைக் குழந்தைகள் 6000 முதல் 8000 டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் , 4000 இலங்கை சிசுக்கள் நெதர்லாந்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.