ஒழுக்கமற்ற அரசியல்வாதிகள் பொலிஸாரை தமது கைக்கூலியாக மாற்ற விரும்புகிறார்கள் - பாலித ரங்கே பண்டார

#Palita Range Bandara #SriLanka #Police #srilankan politics #Lanka4
Kanimoli
2 years ago
ஒழுக்கமற்ற அரசியல்வாதிகள் பொலிஸாரை தமது கைக்கூலியாக மாற்ற விரும்புகிறார்கள் -  பாலித ரங்கே பண்டார

ஒழுக்கமற்ற அரசியல்வாதிகள் பொலிஸாரை தமது கைக்கூலியாக மாற்ற விரும்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

ஆனமடுவ பொலிஸ் நிலையத்திற்கு நியமிக்கப்பட்ட பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சில அரசியல்வாதிகள் மீண்டும் பழைய முறையிலேயே நடந்து கொள்ள ஆரம்பித்துள்ளதாகக் கூறும் பொதுச் செயலாளர், இதற்கு ஜனாதிபதியால் ஒன்றும் செய்ய முடியாது எனவும் இதற்கு முழுப்பொறுப்பையும் பொலிஸ் மா அதிபரே ஏற்க வேண்டும் எனவும் கூறுகிறார்.

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து அந்த பிரதேசத்தில் கடமையாற்ற முடியாத பட்சத்தில் நாட்டின் ஏனைய பொதுமக்களின் நிலை என்ன என ரங்கே பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!