பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்: எதிராக வடக்கு கிழக்கில் போராட்டம்
#SriLanka
#Sri Lanka President
#NorthernProvince
#Protest
Mayoorikka
2 years ago

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் இன்று (20) முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு தழுவி குறித்த போராட்டம் இன்று காலை 10 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த போராட்டம் பழைய மாவட்ட செயலகம் முன்பாக A9 வீதியில் இடம்பெற்றது.
இதேவேளை யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை என பல பாகங்களிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



