முழு சூரியகிரகணம் ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா மற்றும் கிழக்கு திமோர் பகுதிகளில் தென்பட்டது
#NASA
#sun
Mani
2 years ago
சூர்ய குடும்பத்தில், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. முழு கிரகணம், பகுதி கிரகணம், வளைய கிரகணம், வளைய மற்றும் முழு கிரகணம் இணைந்த கலப்பின கிரகணம் என நான்கு வகையான சூரிய கிரகணங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அதன்படி, 400 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் அரிதான கலப்பின சூரியகிரகணம் இன்று நிகழ்கிறது. இந்திய நேரப்படி காலை 7.04 மணிக்கு தொடங்கிய கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. அதேநேரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் பார்க்கலாம்.