‘யால’ அறுவடை காலத்தை கருத்தில் கொண்டு மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரத்தின் விலையை குறைக்க விவசாய அமைச்சு தீர்மானம்
#sri lanka tamil news
#srilankan politics
#srilanka freedom party
#Sri Lanka President
# Ministry of Defense
#Mahinda Amaraweera
Prabha Praneetha
2 years ago
எதிர்வரும் ‘யால’ அறுவடை காலத்தை கருத்தில் கொண்டு மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரத்தின் (‘பண்டி பொஹோரா’) விலையை குறைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி எம்ஓபி உரத்தின் விலையை 2 ரூபாவினால் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
தற்போதைய உர விலையால் விவசாயிகள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமை காரணமாக இந்த முடிவு பரிசீலிக்கப்படுகிறது என்று அவர் விளக்கினார். 50 கிலோ எடையுள்ள எம்ஓபி உர மூட்டை தற்போது ரூ. 18,500 என்று அவர் கூறினார்.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமரவீர குறிப்பிட்டார்.