சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்கள் கைப்பற்றியதுடன் , சந்தேக நபர் ஒருவரும் கைது!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#srilankan politics
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

வடமராட்சி வல்லிபுரத்தை அண்டிய பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு வாகனங்களை சிறப்பு அதிரடி படை கைப்பற்றியதுடன் சந்தேக நபர் ஒருவரையும் இன்று மதியம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இன்று மதியம் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்ட ஒரு கன்டர் ரக வாகனத்தையும், ஒரு வடி ரக வாகனத்தையும் சுறறிவளைத்து சிறப்பு அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

அண்மைக்காலமாக வல்லிபுரம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு நடவடிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில் சிறப்பு அதிரடி படையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .



