மீண்டும் தெலுங்கு டைரக்டர் படத்தில் விஜய்? அழுகாத நிலையில் கெஞ்சும் விஜய் ரசிகர்கள்!
#TamilCinema
#Cinema
Mani
2 years ago

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அடுத்தபடியாக அட்லீ இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
ஆனால் சமீபத்தில் தெலுங்கில் கிராக், வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய கோபிசந்த் மலினேனி, விஜய்யை சந்தித்து ஒரு கதை சொல்லி இருக்கிறாராம். அந்த கதை விஜய்க்கு பிடித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதோடு கோபி சந்தை பொறுத்தவரை ஹீரோக்களை மாஸாக காட்டக் கூடியவர் என்பதால் அவர் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.



