தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வும் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுப்பு
#strike
#TNA
#Protest
#Jaffna
#Lanka4
Kanimoli
2 years ago
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அன்னை பூபதி நினைவு நாள் நிகழ்வும் கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை முன்பாக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இடத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் சமயத்தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, அன்னை பூபதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நாட்டில் இடம்பெற்றுவரும் தொல்பொருள் இடங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி அடையாள உண்ணாவிரத போராட்டமும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது,