சீனாவில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலி

#China #Hospital #Factory #fire #Death #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
சீனாவில் இரு வேறு இடங்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் பலி

சீனாவில் மருத்துவமனை மற்றும் தொழிற்சாலை ஆகிய இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பீஜிங்கின் பெங்டாய் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 

சுமார் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில் 71 நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

இதேபோல், ஜெஜியாங் மாகாணம் ஜின்ஹுவா நகரில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 

மரக் கதவுகள் தயாரிக்கப்படும் பகுதியில், பெயிண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களால் தீ பரவியிருக்கலாம் என தெரிகிறது. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!