ஆண்களுக்கேற்படும் விறைப்புத்தன்மை குறைபாட்டினை நீக்கவல்ல உணவு வகைகள்....

#ஆரோக்கியம் #உணவு #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Food #Antoni #Theva #Antoni Thevaraj
ஆண்களுக்கேற்படும் விறைப்புத்தன்மை குறைபாட்டினை நீக்கவல்ல உணவு வகைகள்....

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மை குறைபாட்டினால் அவர்களது திருமண வாழ்க்கை பாழாகிறது. குளுசைகள், அதிக உடற்பருமன், நீரிழிவு, மது ஆகியவற்றினால் ஆண்களில் விறைப்பு தன்மை குறைபாடு ஏற்படுகிறது.

இதனை சீர் செய்ய ஆண்கள் என்ன வகையான உணவை உட்கொண்டால் விறைப்பு தன்மை குறைபாடு நீங்கும் என்பதை இந்தப் பதிவிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பூண்டு:

ஆணுறுப்பை பெரிதுபடுத்துவதற்கு மிகச்சிறந்த உணவாக இருக்கிறது இந்த பூண்டு. பூண்டில் அதிகமாக அலிசின் நிறைந்திருக்கிறது. பூண்டு உடலில் ஓடும் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொண்டு ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மையை நீண்ட நேரத்திற்கு தக்க வைத்துக்கொள்கிறது.

பாதாம்

பாதாம் பருப்பில் ஜிங்க், செலினியம், வைட்டமின் இ போன்ற சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. பாதாம் பருப்பை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் ஆணுறுப்பு விறைப்பு பிரச்சனை குறைந்து காணப்படும்.

வெங்காயம்:

ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்க பெரும் உதவியாக இருப்பது வெங்காயம். ஒரு சிலருக்கு இந்த வெங்காயம் என்றாலே அறவே பிடிக்காத ஒன்றாகும். ஆணுறுப்பை அதிகப்படுத்துவதற்கு வீட்டு மருத்துவ குறிப்புகளில் மிகச்சிறந்த உணவாக இருக்கிறது வெங்காயம்.

கேரட்:

ஆண்மார்களின் ஆண்மை மற்றும் விந்தணுக்களின் செயல்திறனை அதிகரிக்க வைக்கிறது இந்த கேரட். இது கருமுட்டையை நோக்கி விந்தணுக்கள் வேகமாக செல்ல தேவையான சக்தியை கேரட் விந்தணுக்களுக்கு தருகிறது.

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவு:

இயற்கையாகவே ஆண்களின் ஆணுறுப்பு திறனை அதிகரிக்க பெரும் உதவியாக இருப்பது இந்த ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உணவுகள். இந்த உணவுகளானது உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளவும், விறைப்பு தன்மையும் அதிகரிக்க செய்கிறது.

மாதுளை ஜூஸ்:

ஜூஸ் என்றால் மறுப்பவர்கள் இல்லை. அதில் தான் அதிகமாக சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. மாதுளை பழமானது ஆண்மையை அதிகரிக்க உதவியாக உள்ளது. மாதுளை ஜூஸ் குடிப்பதால் ஆணுறுப்பிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

வைட்டமின் பி3 உணவுகள்:

ஆண்களின் விறைப்பு தன்மையை அதிகரிக்க தினமும் வைட்டமின் பி3 நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். வைட்டமின் பி3 உணவுகளை தேரந்தெடுத்து உட்கொள்ளுவதன் மூலம் ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விறைப்பு தன்மை பிரச்சனையை சரி செய்கிறது.

மெக்னீசியம் உணவுகள்:

மெக்னீசியம் உங்களது டெஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது ஆண்மையை அதிகரிக்க மிகச்சிறந்த உணவாகும். இந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் விறைப்பு தன்மையை அதிகரிக்கலாம்.

இஞ்சி:

இன்ஜி பலருக்கும் பிடிக்காத ஒன்றுதான். இதில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, மாங்கனீசு போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இஞ்சி விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல் ஆண்மையையும் அதிகரிக்க வைக்கிறது.