முன்னாள் சட்டமா அதிபர் தப்புலவுக்கு TID யிடமிருந்து அழைப்பு
#Investigation
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
#wijayadasa rajapaksha
Prathees
2 years ago

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை நாளை பயங்கரவாத விசாரணைப் பிரிவில் ஆஜராகுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் சதி இருப்பதாக அவர் தெரிவித்த கருத்து குறித்து விசாரிக்கவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.



