மட்டக்களப்பு புகையிரத பாதை திருத்தப்பணிகள் காரணமாக மூடப்படும் - புகையிரத திணைக்களம்
#Train
#MetroTrain
#Travel
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

மட்டக்களப்பு புகையிரத பாதையில் கெக்கிராவ மற்றும் பலுகஸ்வெவ நிலையங்களுக்கு இடையில் நெல்லியாகம பாதையில் 119 ஆவது மைல்கட்டுக்கு அருகில் உள்ள கடவுப்பாதை திருத்தப்பணிகள் காரணமாக இம்மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 29ஆம் திகதி காலை 07.00 மணி முதல் 11.30 மணி வரை பகுதியளவிலும், முற்பகல் 11.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை முழுமையாகவும் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 29 ஆம் திகதி மாலை 06:00 மணி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி இரவு 10:30 மணி வரை மீண்டும் பகுதியளவில் மூடப்படும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



