பூசணி விதையை பாலில் கலந்து குடிப்பதனால் உடல் வலிமை பெறுகிறது.

#ஆரோக்கியம் #விதைகள் #அன்டனி #தேவராஜ் #அன்டனி தேவராஜ் #Health #Fruits #Antoni #Theva #Antoni Thevaraj
பூசணி விதையை பாலில் கலந்து குடிப்பதனால் உடல் வலிமை பெறுகிறது.

நமது நல்லாரோக்கியத்திற்கு பழங்கள், காய்கறிகள், விதைகள் மிகவும் பயனுள்ளவை. அத்தகைய விதைகளில் ஒன்றான பூசணி விதையில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இன்றைய பதிவில் காணுவோம்.

பூசணி விதையில் உள்ள சத்துக்கள்:

பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்பு சத்து, வைட்டமின் இ, மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம், தாமிரம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மாரடைப்பு குணமாக:

  • மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு கையளவு பூசணி விதை சாப்பிட்டு வருவது நல்லது.
     
  • மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் மற்றும் Phytoestrogens உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக்கவும், இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க:

  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான முக்கிய காரணம் உடலில் இருக்கும் துத்தநாக சத்து குறைவது தான். துத்தநாகம் உடலில் இல்லாமல் போவதால் இருமல், சளி, காய்ச்சல் போன்றவை ஏற்படலாம்.
     
  • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் தினமும் உணவில் பூசணி விதைகளை சேர்த்து கொள்வது சிறந்தது. பூசணி விதையில் அதிக அளவு துத்தநாக சத்து இருப்பதால் தேகத்தில் நோய் எதிர்ப்பது சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

சர்க்கரை நோய் குணமாக:

  • சர்க்கரை நோய் குணமாக சாப்பிடும் உணவுகளில் ஒன்று இந்த பூசணி விதை. இதில் அதிகப்படியான ஒமேகா 3 அமிலம் இருப்பதால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்து சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், சர்க்கரை நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

கல்லீரலை பாதுகாக்க:

  • பூசணி விதையில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்ட்கள் நிறைய அளவு இருப்பதால் கல்லீரலில் உள்ள நச்சுக்கள், கிருமிகள் வெளியேறி கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கவும், கல்லீரல் சீராக இயங்கவும் உதவியாக உள்ளது.

தூக்கமின்மை குணமாக:​​

  • வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் பூசணி விதை பொடி கலந்து அரை மணி நேரத்திற்கு முன்பு குடித்து வந்தால் நல்ல தூக்கத்தை பெற முடியும்.

உடல் வலிமை பெற:

  • அதிக வேலை காரணமாக பலருக்கும் உடல் சோர்வு இருக்கும், இதனால் உடலில் உள்ள சக்தி குறைந்து காணப்படுவீர்கள்.
     
  • உடல் புத்துணர்ச்சி பெற பூசணி விதையை காயவைத்து பொடி செய்து கொள்ளவும். பின் அந்த பொடியை 1 டேபிள் ஸ்பூன் அளவு பாலில் கலந்து குடித்து வந்தால் உடல் வலிமை பெரும்.

மாதவிடாய் பிரச்சனை நீங்க:

  • அதனை குணமாக்க பூசணி விதையை நெய்யில் வறுத்து தினமும் சாப்பிட்டு வரலாம். மாதவிடாய் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்ய உதவுகிறது.

ஆஸ்டியோபோரோஸிஸ்:

  • பூசணி விதையில் இருக்க கூடிய ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளின் வளர்ச்சியை அதிகரித்து, எலும்பு சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்ய உதவியாக இருக்கும்.