சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு பெறப்படும்!

#SriLanka #Sri Lanka President #IMF #Parliament #government
Mayoorikka
2 years ago
சர்வதேச நாணய நிதியத்தின்  உடன்படிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு பெறப்படும்!

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையால் 2023.03.22 ஆம் திகதி 48 மாதகாலத்திற்கான விசேட மீட்பு உரிமைகள்  2.29 பில்லியன் அமெரிக்க டொலர்கள், (அண்ணளவாக 3 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியுடன் கூடிய நீடிக்கப்பட்ட கடன்வசதி இலங்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு அதற்கான வாக்குறுதிப் பத்திரத்தை வெளியிட்டுள்ளது.

குறித்த நிதி வசதிகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் 2023.03.22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த கடன்வசதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை உறுதி செய்து கொள்வதற்கும், குறித்த கடன் வசதிக்குரிய ஏற்புடைய பிரதான கொள்கை வகுப்புக்களில் உட்சேர்த்துக் கொள்ள வேண்டியுள்ளது. 

அதற்கமைய, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி செயற்பாடுகளுக்காக பாராளுமன்ற அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!