இன்றையவேத வசனம் 14.04.2023: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்

#Bible #today verses #Holy sprit #spiritual
Prathees
1 year ago
இன்றையவேத வசனம் 14.04.2023: வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்

நம்முடைய வாழ்க்கையில் பிள்ளைகளால், உறவினர்களால், காரணமில்லாத சத்துருக்களால் ஏற்படும் பாரங்களால் நாம் சமாதானம் இல்லாமல் தவிக்கின்றோம்.

இந்த பாரங்களை தாங்க முடியாமல் அநேகர், தற்கொலை செய்து கொள்கிறார்கள். கணவரின் குடி வெறியினால் குடும்பத்தில் நிம்மதியிழந்து எத்தனையோ குடும்பங்கள் வறுமையில் வாடும் நிலை. பிள்ளைகள் அநாதைகளாக சுற்றி திரிய வேண்டிய துர்பாக்கியம்.

குழந்தைகள் முதல் வாலிப பெண் பிள்ளைகளுக்கு நாட்டில் நடக்கின்ற கொடுமையான காரியங்கள் இவற்றையெல்லாம் நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். இவற்றையெல்லாம் பார்க்கும் போது எதிர்கால வாழ்க்கையைக் குறித்த பாரம் ஏற்படுவதுண்டு.

ஆனாலும் பிரியமான தேவ ஜனமே கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யோவான் 16:33ல் “உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்" என்றார்.
எப்படிப்பட்ட ஒரு பாரம் உங்களை கட்டியிருந்தாலும் கலங்காதீர்கள்! திடன் கொள்ளுங்கள். இயேசு கிறிஸ்து உலகத்தை ஜெயித்தது போல நீங்களும் உலகத்தை ஜெயிப்பீர்கள் என்ற விசுவாசத்தை அணிகலனாய் கொள்ளும்பொழுது நீங்கள் உலகத்தை ஜெயிப்பீர்கள். 

பக்தன் யாபேஸ் தன் எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயந்தான். அந்த நிலையில் தேவ சமூகத்தில் பாரத்தோடு ஜெபித்தான். கர்த்தர் அவனது எதிர்காலத்தை ஆசீர்வதித்தார்.

யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். (1 நாளாகமம் 4:10)

நீங்களும் கூட உங்களுக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளை குறித்து அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளைக் குறித்து கலங்கி நிற்கலாம், திகைக்கலாம்.

யா வரிசை போல நீங்களும் தேவ சமூகத்தில் உங்கள் பாரங்களை இறக்கி வைத்து விடுங்கள். கர்த்தர் நிச்சயம் உங்கள் பாரங்களை நீங்கச் செய்வார். ஆமென்!! அல்லேலூயா!!!

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (#மத்தேயு 11:28)