சல்மான் கானை கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

#Actor #Cinema
Mani
2 years ago
சல்மான் கானை கொலை மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 9 மணியளவில் மராத்தி மொழியில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியில் பேசிய நபர், தங்களை ராக்கி பாய் என அறிமுகப்படுத்திக்கொண்டு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து பேசுவதாக கூறினார்.

மேலும் வருகிற 30-ந்தேதி நடிகர் சல்மான் கான் கொலை செய்யப்படுவார் என மிரட்டல் விடுத்து உள்ளார். இதனை தொடர்ந்து பரபரப்படைந்த மும்பை போலீசார், தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீசார் விசாரித்தபோது, ​​தானே மாவட்டம் சஹாபூரில் இருந்து அழைப்பு வந்தது தெரிந்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ​​16 வயது சிறுவன் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!