தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

#world_news #Tamilnews #Breakingnews #ImportantNews #Corona Virus #Covid 19
Mani
3 years ago
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் 386 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் 386 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று காரணமாக இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் மக்கள் இருக்கும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மக்கள் பொது இடங்களில் இருக்கும்போது கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்றுநோய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு பயிற்சிகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று தமிழகத்திலும் கொரோனா தடுப்பு பயிற்சி நடைபெற்றது.

தமிழகத்தில் நேற்று 369 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 386 ஆக அதிகரித்துள்ளது.இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 38,051 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4