மலையக மண்ணிற்கு பெருமை சேர்த்த செல்வக்குமார் ஸ்டோனி லியானி
#SriLanka
#Jaffna
#Women
#NuwaraEliya
#Lanka4
#University
#lecturer
#L4
Prasu
1 hour ago
மலையக மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், நுவரெலியா மாவட்டம் லிந்துலை வோல்டிரிம் (Walltrim) தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்வக்குமார் ஸ்டோனி லியானி (Selvakumar Stony Liani) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறை உதவி விரிவுரையாளராக (Assistant Lecturer) நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது ஆரம்பக் கல்வியை வோல்டிரிம் தமிழ் வித்தியாலயத்திலும், உயர் கல்வியை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் (T.M.V) கற்றுச் சாதனை படைத்த இவர், தற்போது பல்கலைக்கழக விரிவுரையாளராகத் தடம் பதித்துள்ளார்.
இவரது இந்த உயரிய நியமனம் ஒட்டுமொத்த மலையக சமூகத்திற்கும், அவர் கல்வி கற்ற கல்வி நிறுவனங்களுக்கும் பெருமிதத்தைத் தேடித்தந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே