திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பலி

#Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு பலி

திருச்சி கே.கே.நகர் சுதானா நகரை சேர்ந்தவர் சிவா (வயது 49). இவர் திருச்சி மாவட்ட சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று வேலைக்கு வந்த அவர், பின்னர் வீட்டிற்கு சாப்பிட செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். இவரது வீட்டின் அருகே சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 1999-ம் ஆண்டு கோட்டை காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியில் சேர்ந்தார்.பின்னர், புலனாய்வுப் பிரிவு, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, பின்னர் சி.பி.சி.ஐ.டி. இவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4