நடிகர்களுக்கு இணையான சம்பளம் நடிகைகளுக்கும் வழங்க வேண்டும் - ராதிகா ஆப்தே வலியுறுத்தல்.

#Actress #Cinema #TamilCinema
Mani
2 years ago
நடிகர்களுக்கு இணையான சம்பளம் நடிகைகளுக்கும் வழங்க வேண்டும் - ராதிகா ஆப்தே வலியுறுத்தல்.

ராதிகா ஆப்தே தமிழில் ரஜினியுடன் கபாலி, கார்த்தியுடன் 'ஆல் இன் அழகுராஜா' மற்றும் 'சித்திரம் பேசுதடி-2', 'வெற்றி செல்வன்', உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தி திரையுலகில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகை. ராதிகா ஆப்தே அளித்த பேட்டியில், “திரையுலகில் பணியாற்றும் நடிகைகள் மற்றும் பிற பெண்களுக்கு சம்பளம், பெயர், புகழ் ஆகியவற்றில் நடிகைகளுக்கு நிகரான உரிமைகள் இருக்க வேண்டும்.

கதாநாயகிகளுக்கும் ஹீரோக்களுக்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கும் பெண் கதாபாத்திரங்கள் கொண்ட படங்கள் அதிகம். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இதனால்தான் இந்தி சினிமாவில் பணியாற்றும் பெண்கள் சண்டை போட்டு வருகின்றனர்.

இப்போதெல்லாம் உலகம் மாறிவிட்டது, எல்லாத் துறைகளிலும் ஆண், பெண் வேறுபாடு இல்லை. பெண்கள் சமத்துவத்துக்காகப் போராடுகிறார்கள், ஒட்டுமொத்த சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும் சினிமா துறையிலும் சமத்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.என்றார்.
 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!