இறுதியாக இந்தி திரைப்பட மாஃபியாவைப் பற்றி பேச எனக்கு தைரியம் வந்தது - நடிகை பிரியங்கா சோப்ரா.

#Actress #Cinema #TamilCinema
Mani
2 years ago
இறுதியாக இந்தி திரைப்பட மாஃபியாவைப் பற்றி பேச எனக்கு தைரியம் வந்தது - நடிகை பிரியங்கா சோப்ரா.

தமிழ் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா இந்தி மொழியிலும் முன்னணி நடிகையாகிவிட்டார். ஒரு கட்டத்தில், அவரது படங்கள் எண்ணிக்கை குறைந்ததால் ஹாலிவுட்டுக்கு சென்றார். "இந்திய சினிமா மாஃபியாவின் கையில் உள்ளது, என்னை ஓரங்கட்டிவிட்டார்கள், அரசியலை சகிக்க முடியாமல் ஹாலிவுட்டுக்கு சென்றுவிட்டேன்" என பிரியங்கா சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

கங்கனா ரனாவத் உட்பட பல நடிகைகள், இத்தனை நாட்கள் மவுனம் காத்து வந்த பிரியங்கா சோப்ராவுக்கு ஆதரவு தெரிவித்தனர். பிரியங்கா சோப்ரா திடீரென தனக்கு ஆதரவாக பேசியது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இதுகுறித்து பிரியங்கா சோப்ரா விளக்கமளிக்கையில், "சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், எனது திரையுலக வாழ்க்கைப் பயணம் குறித்து என்னிடம் கேட்டனர். அதனால் இந்தி பட உலக மாஃபியா கும்பல் உட்பட என் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பேசினேன்.

இன்று என் வாழ்க்கையில் நான் அனுபவித்த வலிகளை வெளிப்படையாகப் பேச வேண்டிய நிலையில் இருக்கிறேன். நான் அனுபவித்த சங்கடமான சூழ்நிலைகளைப் பற்றி உலகுக்குச் சொல்ல நான் இறுதியாக தைரியமாக இருக்கிறேன்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!