முன்னாள் முதல்-மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாராரியாவும் ஜான்வி கபூரும் காதலித்து வருகின்றனர்.

#India #Cinema #Actress
Mani
2 years ago
முன்னாள் முதல்-மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாராரியாவும் ஜான்வி கபூரும் காதலித்து வருகின்றனர்.

1980களில் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவி, இந்தி திரையுலகிலும் ஆதிக்கம் செலுத்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்தார்.

இவர்களுக்குஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி இறந்துவிட்டார். ஜான்வி கபூர் தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இவருக்கும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் ஷிகர் பஹாராரியாவுக்கும் இடையே காதல் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.

இந்நிலையில் ஜான்வி கபூரும், ஷிகர் பஹாராரியாவும் திருப்பதிக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். இருவரும் ஜோடியாக கோவிலில் வலம் வரும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனால் இவர்கள் நிச்சயம் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஹிந்தி பட உலகில் பேசப்பட்டு வருகிறது. ஜான்வி கபூர் ஜூனியர் (என்.டி.ஆர்) ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!