நடிகை நிதி அகர்வாலின் பட வாய்ப்புக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
#Actress
#TamilCinema
Mani
2 years ago

சமீபகாலமாக பல நடிகைகள் கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்வது, சாமியார்களை சந்திப்பது, ஜோதிடர்களிடம் ஆலோசனை கேட்பது போன்றவற்றை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பட வாய்ப்புக்காகவும், நல்ல கணவராக வருவதற்காகவும் இப்படி செய்கிறார் என்கிறார்கள் திரையுலகினர். இதில் நடிகை நிதி அகர்வாலும் இணைந்துள்ளார். நிதி அகர்வால் ஆந்திராவில் பிரபல ஜோதிடரிடம் சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடத்தியுள்ளார். இவர் பூஜை செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகளை அதிகரிக்க நிதி அகர்வால் சிறப்பு பூஜை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அகர்வால் ஈஸ்வரன், பூமி, கலகத் தலைவன் போன்ற தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தெலுங்கில் பிரபலமான நடிகை.



