நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த மருத்துவமனைக்கு 15 லட்சம் அபராதம்

டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் முழுமையான இரத்த எண்ணிக்கை பரிசோதனைக்காக நோயாளர்களிடம் இருந்து 1,350 ரூபா பணம் வசூலித்ததாக கூறப்படும் தெஹிவளை பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் கொழும்பு மாவட்ட பிரிவின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி ரஞ்சனா தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தனியார் வைத்தியசாலை அல்லது ஆய்வகத்திற்கு விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.
டெங்கு நுண்ணுயிர் பரிசோதனைக்கு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த 1200 ரூபாவுக்கும் அதிகமாகவும் 2500 ரூபாவும், நிர்ணயிக்கப்பட்ட 400 ரூபாவுக்கு மேல் 550 ரூபாயும் குறித்த தனியார் வைத்தியசாலை நோயாளிகளிடம் வசூலித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வைத்தியசாலைக்கு எதிராக மவுண்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



