ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை கட்டாயமாக மீட்டெடுப்போம் - உக்ரைன் ஜனாதிபதி

#Ukraine #Russia #War #President #Zelensky #world_news #Tamilnews #Lanka4
Prasu
3 years ago
ரஷ்யாவிடம் இழந்த நிலங்களை கட்டாயமாக மீட்டெடுப்போம் - உக்ரைன் ஜனாதிபதி

உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் போர் ஓராண்டை கடந்துள்ளது. ஓராண்டுக்கு பின்பும் இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ தாக்குதல்கள் நீடித்து வருகின்றன. 

இதற்கிடையே, உக்ரைன் போர் தொடங்கி 400 நாட்கள் நிறைவடைந்துள்ளது. 

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோவில் தோன்றி பேசியதாவது: இந்தப் போரில் உக்ரைன் நிச்சயம் வெற்றி பெறும். நிலங்களை மீட்பதிலும் வெற்றி பெறுவோம். 

நீதியை மீட்டெடுப்பதிலும் நாங்கள் வெற்றி பெறுவோம். எந்தவொரு எதிரியையும் தண்டிக்காமல் நாங்கள் விடமாட்டோம். அதற்கான தகவலை சேகரித்து வருகிறோம். 

முழு அளவிலான ஆக்கிரமிப்புக்கு எதிரான எங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் 400 நாட்களாக தொடர்ந்து வருகின்றன. நாங்கள் ஒரு பெரிய பாதையில் நடந்து வந்துள்ளோம்.

உக்ரைனுக்காக போரிட்ட மற்றும் போரிட்டு வரும், நாடு மற்றும் நாட்டு மக்களை கவனத்துடன் பாதுகாத்த மற்றும் பாதுகாத்து வரும், உதவி செய்து மற்றும் தொடர்ந்து எங்களது பாதுகாப்பு தளவாடங்களுக்கு உதவி வரும், உக்ரைனின் மீட்சியை வலுப்படுத்தியவர்களுக்கும், வலுப்படுத்தி வருபவர்களும் அனைவரும் ஒன்றிணைவோம்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4