கஜினி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை - ஏ.ஆர்.முருகதாஸ்

#Director #Actor #surya
Mani
2 years ago
கஜினி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் தற்போது எனக்கு இல்லை - ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சூர்யாவின் கஜினி மற்றும் விஜய்யின் துப்பாக்கி ஆகிய இரண்டும் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெற்றன. கஜினி இந்தியில் அமீர்கான் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கஜினி, துப்பாக்கி  படத்தின் இரண்டாம் பாகங்களை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் முருகதாஸ் ஏற்கனவே கூறியிருந்தார்.

கஜினி 2ம் பாகம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "கஜினி தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. கஜினியில் அசின் கதாபாத்திரம் கல்பனா இறந்து விட்டார். சூர்யாவின் கதாபாத்திரமும் மறக்கடிக்கப்பட்டது.

அதனால் நான் இப்போது கஜினியின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதில்லை. என்னிடம் இன்னும் பல கதைகள் உள்ளன. நான் ஒரு கற்பனைக் கதையை ஒரு திரைப்படமாக உருவாக்குவேன்," என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!