கடவுளா இவ்வுலகை படைத்தது?

#spiritual #Hindu #Temple #God #goddess #Lanka4
Kanimoli
1 year ago
கடவுளா இவ்வுலகை படைத்தது?

படைத்தவன் யாரும்  இல்லை. 
இருந்தால், 
அவனா? 
அவளா? 
அதுவா?
அவனாயின் அவன் தானாக தோன்றினானா?


கடவுள் என மானிடன் கூறும் அல்லது புனையும் கடவுள் எம்மதமாக இருந்தாலும் ஆதி மனிதர்களாக இருக்க வாய்ப்பு உள்ளது. அவ் ஆதி மனிதன் உருவாக ஆண் பெண் இருவர் தேவை. அவர்களைப் படைத்தது யார்? 
அப்படி எனின் அதற்க்கு முன்னர் மனிதர்களையும் அல்லது ஆணையும் பெண்ணையும் படைக்க வல்ல ஒரு சக்தி இருந்திருக்க வேண்டும். அதுவே கடவுள் அது இப்பொழுது உள்ளதா? இல்லையா? என விவாதிப்பதானால் நிரூபனம் செய்ய முடியாது. 


கல், மண், மரம் எப்படி தோண்றியதோ அப்படித்தான் விலங்குகளோ மனிதர்களோ தோன்றியிருக்க வாய்ப்பு உள்ளது. 
மனிதனைத் தாண்டி அவனை விட  வல்லமை வாய்ந்த ஒரு ஆற்றல் உண்டு அதைத்தான் பல மதங்களும் ஒப்புக்கொண்ட உருவம் இல்லாத ஆற்றல் ஆகும் 


அல்லா. பிதா போலவேதான் இந்துக்களின் சக்தியும் சக்தி என்பது விசை ஆற்றல் என பொருள்படும். 
ஆம் கடவுள்தான் உலகத்தை படைத்திருந்தால். சூரியன், சந்திரன் மற்ற கோள்களையும் அக் கடவுளா படைத்தான்?
ஆராய்ந்து புத்தியை கூர்மையாக்கினால் விடை பெறுவது  இலகுவான விடயம். ஆம் அடுத்தவர் கூறியதை அப்படியே காவி பிரதி  பண்ணாமல். ஆராய் உனக்குள் இருந்து ஆராய். எப்படி அடுத்தவரின் ஆய்வை படிக்காமல் ஆராய்வது என கேள்வி எழலாம். பதில் நீ அமைதியாக உன்னை விட்டு வெளியே போ. தியானத்திலிருந்து கேள்விக்கணைகளை தொடு. உன்னால் தொட முடியாதா?

உன்னால் காண முடியாதா? உன்னால் பார்க்க முடியாத பல அற்புதங்களை உன்னை அண்டி வரும். வள்ளுவர் எப்பள்ளியில் கற்றார்? அவருக்கு குறளை கடவுளா எழுத வைத்தார்? 


ஆம் உனக்குள் உள்ளவையே வெளியேயும் உள்ளது. இவ் அண்டங்கள் எல்லாமே உனக்குள் அடக்கம் நீயே அது. உன்னால் உனக்கு செய்ய முடியாதவைகள் அடுத்தவனால் செய்ய இயலாது. கடவுள் என்பது ஒரு ஆற்றல் மட்டுமே.