ராஷிகன்னா காதல் கதைகளில் நடிக்க விரும்புகிறார்.
 (1).jpg)
இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் போன்ற தமிழ் படங்களில் நடித்து பிரபலமான ராஷிகண்ணா பல இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். அடுத்து காதல் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
ஒரு பேட்டியில் ராஷிகன்னா கூறியதாவது: ரசிகர்கள் காதல் படங்களை பார்க்க விரும்புகிறார்கள், காதல் படங்கள் என்றுமே போரடிக்காது. வித்தியாசமான காதல் படங்களில் நடிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஆஷிகி போன்ற காதல் கதையில் நடிக்க வேண்டும் என்பது எப்போதுமே எனது கனவு.
சமீபகாலமாக நிறைய இயக்குனர்கள் என்னிடம் காதல் கதைகளை சொல்லி வருகிறார்கள். ஆனால் அந்தக் கதைகளில் புதிதாக எதுவும் இல்லை. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள்; அவர்களின் காதல் கதைகளில் இதயத்தைத் தொடும் உணர்வுகள் இல்லை.
காதல் கதைகளில் நடிக்க பொருத்தமான நடிகர் கார்த்திக் ஆர்யன். எனக்கும் அவருடன் நடிக்க ஆசை.



