மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை வழங்கினார்.
#Actor
#TamilCinema
Mani
2 years ago
.jpg)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். அவரது ஹிந்திப் படமான "மெர்ரி கிறிஸ்துமஸ்" விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இவர் கைவசம் பல படங்கள் உள்ளன.
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ''விடுதலை' திரைப்படம் நாளை திரைக்கு வருகிறது. விஜய் சேதுபதி நடிப்பு மட்டுமின்றி பல பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது சமூக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறை நூலகத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி 1000 புத்தகங்களை வழங்கியுள்ளார். மதுரை மத்திய சிறைத்துறை துணை கமிஷனர் பழனி, சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



