நோயிலிருந்து மீண்டு வருகிறேன் - நடிகை சமந்தா

#TamilCinema #Actress
Mani
2 years ago
நோயிலிருந்து மீண்டு வருகிறேன் - நடிகை சமந்தா

நடிகை சமந்தாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் சில நடிப்பு வாய்ப்புகளை அவர் இழக்க நேரிட்டது. இதனால் அவர் புதிய படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் இந்தி வெப் சீரிஸ் ஒன்றின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். குஷியும் தெலுங்கில் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். தீவிர உடற்பயிற்சி வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கம். இதனையடுத்து சமந்தா நோயில் இருந்து பூரண குணமடைந்து விட்டதாக செய்திகள் பரவின.

இதற்கு சமந்தா விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், "எனது மயோசிடிஸ் முழுமையாக குணமாகவில்லை, நான் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறேன். இருப்பினும், முந்தைய காயத்தில் இருந்து மீண்டுவிட்டேன். விரைவில் இந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைவேன்" என்று அவர் கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!