வரி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தினருடன் கலந்துரையாடல் மேற்கொண்ட மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

வரித் திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளன.
நாட்டில் எந்தவொரு வரித் திருத்தத்தையும் ஒட்டுமொத்த வரி வருமானத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ள முடியும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்ததாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூம் தொழிநுட்பத்தினூடாக சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி சமில் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைமுறையில் உள்ள வரிக் கொள்கையில் குறிப்பிட்ட மாற்றங்களுக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என நிதியமைச்சகம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரி நிவாரணம் தொடர்பில் தமது தொழிற்சங்கம் பல முன்மொழிவுகளை அரசாங்கத்திற்கு முன்வைத்துள்ளதாகவும், தொடர் முன்மொழிவுகளை முன்னெடுப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு தீர்வொன்றை வழங்க அரசாங்கம் தலையிடாவிட்டால், எந்த நேரத்திலும் கடுமையான தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.



