மதம் மாற்ற முற்படுவோர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். - சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் ஐயா.

மதம் மாற்ற முற்படுவோர் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள். - சிவசேனைத் தலைவர் சச்சிதானந்தம் ஐயா.
சைவ சமயத்தவர்களை மதமாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவர்களோ, முகமதியர்களோ அல்லது வேறு சமயத்தவர்களோ நடவடிக்கைகள் மேற்கொண்டால் விரட்டியடிக்கப்படுவார்கள் என மறவன்புலவு சச்சிதானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் அவர் குறிப்பிடுகையில்,இராவணன் ஆண்ட சிவ பூமியில் பத்தாயிரம் ஆண்டுகளிற்கு மேலாக சைவ சமயத்தினை பின்பற்றுகின்ற மக்களின் மரபுகளை அழித்து இல்லாதொழிப்பதற்காக கடந்த 400 ஆண்டுகளாக வேறு நாடுகளிலிருந்து வருகை தருகின்றனர்.
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆகியோரின் வருகைக்கு பின்னர் தற்பொழுது, கிட்டத்தட்ட 300, 400 மதமாற்று சபைகள் சைவர்கள் மத்தியில் உலா வருகின்றன.



