காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்: தேசபந்துவுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Sri Lanka President
#Lanka4
#Tamilnews
Prabha Praneetha
2 years ago

காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்களை தடுக்க தவறியமைக்காக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணியினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இது தொடர்பான மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த மனுவை செலவுகளுடன் நிராகரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.



