உங்களால் முடிந்தளவு பணத்தை தந்துதவுங்கள்: வேண்டி நிற்கும் முன்னாள் ஜனாதிபதி

#SriLanka #Sri Lanka President #Maithripala Sirisena #Court Order #Tamilnews #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
 உங்களால் முடிந்தளவு பணத்தை தந்துதவுங்கள்: வேண்டி நிற்கும் முன்னாள் ஜனாதிபதி

உங்களால் முடிந்தளவு பணத்தைக் கொடுத்து உதவுங்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் பொருட்டு உயர் நீதிமன்றம் 100 மில்லியன் ரூபாய் பணத்தை ஆறு மாதங்களில் செலுத்த எனக்கு அவகாசம் கொடுத்தது. அதில் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன என பெத்தேகமவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய போது அவர் தெரிவித்தார்.

”நான் கொள்ளையடிக்கவோ குண்டு வீசவோ இல்லை. ஆனாலும் எனது அரசாங்கத்தில் இருந்த சில அதிகாரிகள் தமது பொறுப்புகளை சரியாகக் கவனிக்காததால் நான் அபராதம் செலுத்த வேண்டியுள்ளது” என அவர்  தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து எனக்கு எந்த தகவல்களும் வரவில்லை என உயர் நீதிமன்ற தீர்ப்பு தெளிவாக கூறுகிறது.

”நான் கொள்ளையடிக்கவும் குண்டு வீசவுமில்லை. இப்போது நான் எனது நண்பர்களிடமும் நலன்விரும்பிகளிடமும் இருந்து பணம் சேகரித்துக் கொண்டிருக்கின்றேன்.

நான் சட்ட வல்லுனர் இல்லையென்பதால் கொடுக்கப்பட்ட காலத்திற்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை.

பணத்தை செலுத்த தவறினால் நான் சிறைக்குச் செல்ல நேரிடுமா  இல்லையென்றால் வேறு ஏதேனும் தீர்ப்பு விதிக்கப்படுமா என்பது எனக்குத் தெரியவில்லை” என்று தெரிவித்தார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!