அரசாங்கத்தின் இரண்டு முக்கிய நிறுவனங்களின் பங்குகளை கொள்வனவு செய்யும் தமிழன்: இரகசிய பேச்சுவார்த்தை?

இலங்கை டெலிகொம் நிறுவனம் மற்றும் லங்கா ஹொஸ்பிடல் இன் அரசாங்க பங்குகளை கொள்வனவு செய்வதற்காக இரகசிய பேச்சு வார்த்தை ஒன்று பிரித்தானியா வாழ் ஈழத் தமிழன் அல்லிராஜா சுபாஸ்கரன் உடன் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பேச்சுவார்த்தைக்காக அல்லிராஜா சுபாஷ்கரன் பிரித்தானியாவிலிருந்து இலங்கை வரவுள்ளார்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைய சில அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் முதற்கட்டமாக இலங்கை தொலைத் தொடர்பு ஆணைக்குழுவை மறுசீரமைப்பதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதன் பிரகாரமே அல்லிராஜா சுபாஷ்கரனுடன் இந்த இரகசிய பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொருளாதார மறுசீரமைப்பு என குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களின் பங்குகளை தனியார் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
நாட்டின் பொருளாதாரம்,தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கும் நிலையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறியிருந்தார்.
Sabaskaran Aliraja is arriving in SL tomorrow for secret talks with RW & Sagala R regarding purchasing the Govts Shares of SLT & lanka Hospital, making an annual profit of Rs 12.2 & 4 Billion. We & our children are deprived of Rs 8 billion per annum. Why? What's the logic? https://t.co/QZ3b5seL4P
— Kamal Perera (@KamalPe69257601) March 25, 2023



