சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களை தெரிவித்து செய்யும் நடவடிக்கை!

சிறிலங்காவில் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு பேரவை குறிப்பிட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களில் இருந்து அந்தந்த ஆணைக்குழுவிற்கான தகுதியானவர்களை தெரிவு செய்யும் பணி நடைபெற்று வருவதாக பேரவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
தேசிய கணக்காய்வு ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்காக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து பொருத்தமானவர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இதேவேளை சுயாதீன ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கு 1,600க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசியலமைப்பு பேரவை குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு, எல்லை நிர்ணய ஆணைக்குழு, காவல்துறை ஆணைக்குழு, தேசிய கணக்காய்வு ஆணைக்குழு, கையூட்டல் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பொது சேவை ஆணைக்குழு உள்ளிட்ட 10 ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனங்கள் இதன்போது மேற்கொள்ளப்படவுள்ளன.



