மனித உரிமை மீறல் குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் தாமதம்: ஐ.நா கவலை

#SriLanka #UN #War #Human Rights #Human #sri lanka tamil news #Lanka4
Mayoorikka
2 years ago
மனித உரிமை மீறல் குற்றவாளிகளை  சட்டத்தின்முன் நிறுத்துவதில் தாமதம்: ஐ.நா கவலை

சிறிலங்காவில் போரின் போது மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கடும் கரிசனையை வெளியிட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை, சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கான பொறுப்புக் கூறலை உறுதிசெய்ய வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகளின் குழு, சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

மேலும், சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் அரசியலமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறையில் தொடரும் தாமதம் மற்றும் அதன் தற்போதைய நிலைவரம் குறித்து போதியளவு தகவல்கள் இல்லாமை குறித்தும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு தமது கரிசனையை வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!