2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலைத் தவணை இன்று ஆரம்பம்

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை தவணை இன்று தொடங்குகிறது. இந்த வருட இறுதிக்குள் கல்வியாண்டு தொடர்பான பாடத்திட்டங்களை உள்ளடக்கி, அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் பாடசாலையின் முதல் தவணையை வழமையாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
உயர்தர விடைத்தாள்கள் பரீட்சை தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் பாடசாலையின் முதலாம் தவணையை முன்னைய முறைப்படி ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்திற்கு தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், விடைத்தாள்களை சரிபார்க்கும் பிரச்சினையை விரைவில் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
அத்துடன், பாடசாலை சீருடை துணிகள் மற்றும் பாடசாலை பாடப்புத்தகங்கள் கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு இன்று முதல் வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.



