நாட்டை விட்டு வெளியேறிய போதகரும் மற்றும் குடும்பத்தினரும் ..
#SriLanka
#sri lanka tamil news
#srilankan politics
#Sri Lanka President
#srilanka freedom party
#Local council
Prabha Praneetha
2 years ago
.jpg)
பிரபல இந்திய போதகர் மற்றும் அவரது குடும்பத்தினரும்; விசாவை தவறாக பயன்படுத்தியதாக எழுந்த முறைப்பாட்டை அடுத்து, குடிவரவுத்துறை அதிகாரிகளால்; நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்த போதகரும்; மற்றும் குடும்பத்தினரும் நேற்று பிற்பகல் நாட்டை விட்டு வெளியேறினர்.
முன்னதாக அவர் நெறிமுறையற்ற மதமாற்றப் பணியில் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
இந்திய போதகரும் குடும்பத்தினரும்; யாழ்ப்பாணம் மானிப்பாயில் கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரண்டு நாள் நிகழ்ச்சியை நடத்தவிருந்தனர்.



