கண்ணீர் புகைக்குண்டுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது
#Colombo
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#tears
Prathees
2 years ago

கண்ணீர் புகை குண்டுகள், பொலிஸ் நாய்கள், குதிரைகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் தேவைப்படுவதால், டொலர் நெருக்கடி காரணமாக வெளிநாடுகளில் இருந்து இலங்கை பொலிஸாருக்கு இறக்குமதி செய்யப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இறக்குமதிக்கான டெண்டர் கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் குமாரசிறி தெரிவித்தார்.
இதன்படி, கண்ணீர் புகை குண்டுகள், 20 பொலிஸ் நாய்கள் மற்றும் 05 குதிரைகளை கொண்டு வருவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.



