நாவலர் மண்டபம் அமைக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற்றப்படும் - வடக்கு ஆளுநர்
#Governor
#government
#Jaffna
#SriLanka
#sri lanka tamil news
#Lanka4
Kanimoli
2 years ago

யாழ். நாவலர் கலாச்சார மண்டபம் அமைக்கப்பட்டதன் நோக்கத்தை உரிய முறையில் நிறைவேற்றுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கி உள்ளதாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
யாழ் நாவலர் மண்டபத்தை மாநகர சபையின் பராமரிப்பில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டதா என வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில், நாவலர் மண்டபத்தை இந்து கலாச்சார திணைக்களம் மற்றும் மாநகரசபை இருவரும் பராமரிப்பதற்கான சூழ்நிலைகள் இருந்த போதும் உரிய முறையில் அதனை செயற்படுத்தவில்லை.
ஆகவே அதன் செயல்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய பொறுப்புக்களை வழங்க சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என அவர் மேலும் தெரிவித்தார்.



