பந்துல குணவர்தனவை நோக்கி பரிகாசக்குரல் எழுப்பிய நபர் கைது
#Arrest
#Police
#Colombo
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

கொழும்பின் பிட்டிபன சந்திக்கு அண்மித்த நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவை நோக்கி பரிகாசக்குரல் எழுப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஹோமாகம பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பௌத்த விஹாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அமைச்சர் கலந்து கொண்ட போது, லொறியில் சென்ற ஒருவர் அமைச்சரை நோக்கி சத்திடமிட்டுள்ளார்
எனினும் துரிதமாகச் செயற்பட்ட பொலிஸார், லொறியை துரத்திச் சென்று சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் ஹோமாகம, பிடிபன வடக்கில் 43 வயதான வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மதச் சடங்குகளுக்கு இடையூறு விளைவித்ததற்காகவும், மதத்தை கடைப்பிடிக்கும் உரிமைக்கு சவால் விடுத்ததாகவும் குற்றம் சுமத்தி அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



