அசாதாரணமான சூழ்நிலை காரணமாக மன்னர் சார்லஸின் பிரான்ஸ் பயணம் ஒத்திவைப்பு
#KingCharles
#France
#Protest
#world_news
#Tamilnews
#Lanka4
Prasu
2 years ago
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் அரசு முறை பயணமாக நாளை பிரான்ஸ் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் பிரான்சில் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிராக மக்கள் தீவிரமான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் பிரான்சில் அசாதாரணமான சூழல் நிலவி வருகின்றது.
இதன் காரணமாக அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மன்னர் மூன்றாம் சார்லஸின் பயணத் திட்டத்தை ஒத்திவைக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளார்.
அவரின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னரின் பயணத்திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக இங்கிலாந்து அரண்மனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.