உக்ரைனை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு 335 பில்லியன் பவுண்டுகள் தேவைப்படும் - உலக வங்கி

#Ukraine #War #Russia #World Bank #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
உக்ரைனை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு 335 பில்லியன் பவுண்டுகள் தேவைப்படும் - உலக வங்கி

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை கடந்து தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்தப் போரினால் உக்ரைனின் சேத மதிப்பு குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது உக்ரைனை மீண்டும் கட்டி எழுப்புவதற்கு 335 பில்லியன் பவுண்டுகள் தேவைப்படுகின்றது. அதாவது இந்த போரினால் கிட்டத்தட்ட 10,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

மேலும் இரண்டு பில்லியன் மக்கள் குடியிருப்புகள், ஐந்தில் ஒரு மருத்துவமனை, 650 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேதமடைந்துள்ளது.

குறிப்பாக ரஷ்யாவின் ஏவுகணை தாக்கி அழிந்த கட்டிடங்களின் மதிப்பு 110 மில்லியன் பவுண்டுகள் ஆகும். உக்ரைன் வீரர்களின் தடுப்பு நடவடிக்கை இல்லாமல் இருந்தால் சேதம் மிகவும் மோசமாக இருந்திருக்கும். 

மேலும் கடந்த மாதம் உக்ரைனின் முக்கிய பகுதிகளான டொனெஸ்ட், கார்கீவ், கெர்சன் போன்ற நான்கு பிராந்தியங்கள் தான் மிகவும் மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

அதோடு ரஷ்ய படைகளால் உக்கரைனின் 15 ஆண்டு கால பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்துள்ளது. அதோடு 1.7 மில்லியன் மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அது மட்டுமல்லாமல் எரிசக்தி துறையில் மொத்த சேதம் கடந்த கோடைகாலத்தில் இருந்ததை விட இப்போது ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!