அமெரிக்காவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை

#America #Sexual Abuse #Arrest #India #Prison #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
அமெரிக்காவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்த இந்தியருக்கு 15 ஆண்டு சிறை

அமெரிக்காவில் சுற்றுலா நிறுவனத்துக்கு சொந்தமான சொகுசு கப்பலில் இந்தியாவை சேர்ந்த ஏஞ்சலோ விக்டர் பெர்னாண்டஸ் என்பவர் வேலை பார்த்து வந்தார். 

இவர் கடந்த ஆண்டு சொகுசு கப்பலில் பயணித்த ஒரு பயணிக்கு செல்போனில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. 

மேலும் அந்த பயணியிடம் குழந்தைகளுடன் பாலியல் உறவு வைத்து கொள்ள தான் ஏற்பாடு செய்வதாகவும் விக்டர் கூறியுள்ளார். 

இது தொடர்பான புகாரில் விக்டர் மற்றும் அந்த பயணி கைது செய்யப்பட்டு அமெரிக்காவின் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று முன்தினம் இதன் தீர்ப்பு வெளியானது. இதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்ததற்காக விக்டருக்கு 15 வருடம் 8 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!