பாகிஸ்தானில் தேர்தல் நடத்த போதுமான பணம் இல்லை - பாதுகாப்பு மந்திரி

#Pakistan #Election #Finance #money #Minister #world_news #Tamilnews #Lanka4
Prasu
2 years ago
பாகிஸ்தானில் தேர்தல் நடத்த போதுமான பணம் இல்லை - பாதுகாப்பு மந்திரி

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்க ளின் விலை அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல், கோதுமை உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்த படி இருக்கிறது. 

நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அன்னிய செலாவணி இருப்பு குறைந்து வரும் நிலையில் சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 

இதற்கிடையே பாகிஸ்தானில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தி வருகிறார். இதை வலியுறுத்தி அவரது கட்சி போராட்டங்களில் ஈடுபடுகிறது. 

இந்த நிலையில் பாகிஸ்தானில் தேர்தல் நடத்த போதுமான பணம் இல்லை என்று அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி கஜாவா ஆசிப் தெரிவித்தார். 

இது தொடர்பாக அவர் கூறியருப்பதாவது:- பாகிஸ்தானில் தேர்தலை நடத்துவதற்கான போதுமான பணம், நிதியமைச்சகத் திடம் இல்லை. 

இதனால் தற்போது தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை. இம்ரான் கான் கூறி வரும் கொலை முயற்சி குற்றச்சாட்டு பொய்யானது. அவர் மாகாண சபைகளை அரசியலமைப்பிற்கு முரணாக கலைத்து விட்டார். 

ஆனால் அவர் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின் மூலம் அரசியலமைப்பு ரீதியாக பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது அவர் கோர்ட்டு முன் ஆஜராக விரும்பவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!